தனுஷின் இட்லி கடை!! படத்தை பார்த்தவங்க என்ன சொல்லிருக்காங்க பாருங்க...
தனுஷின் இட்லி கடை
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை நாளை அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதிலும் இருக்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரகனி, பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பிலும் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையிலும் வெளியாகவுள்ளது. இட்லி கடை படத்தினை தனுஷுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் முக்கியமான விநியோகஸ்தர்கள் பார்த்துள்ளார்களாம்.
அவர்களுக்கு படம் ரொம்பவே பிடித்துவிட்டதாம். குறிப்பாக இளைஞர்களைவிட இட்லி கடை படம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவரும் என்று படத்தை பார்த்தவர்கள் தங்களின் கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.
படம் எப்படி இருக்கு
சமீபகாலமாக குடும்பங்களை கவரும் வகையிலான படங்கள் வெகுகாலத்திற்கு பின் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வருகிறது.
குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி, 3BHK போன்ற படங்களை தொடர்ந்து இட்லி கடை படமும் இடம்பெறும் என்றும் கூறுகிறார்கள். குறிப்பாக இப்படம் கண்டிப்பாக மிகப்பெரியளவில் வசூலிக்கும் என்று முக்கிய புள்ளிகள் கூறியுள்ளனர்.
இட்லி கடை படத்தின் ட்ரைலரை பார்க்கும்போதே இப்படம் எப்படி இருக்கும் என்ற கணிப்பிற்கு நம்மால் வரமுடிந்தது. ஃபீல் குட் எமோஷனல் படமாக இட்லி கடை இருக்கும் என்றும் படத்தை பார்த்தவர்கள் இட்லி கடை சிறப்பான ஃபீல் குடு எமோஷ்னல் படமாக இருப்பதாகவும் கூறுகிறார்களாம்.
எமோஷனல் குடும்ப ரசிகர்களிடம் மிகப்பெரியளவில் கனெக்ட் அகும் என்றும் எமோஷனல் தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் பட்சத்தில் அப்படம் தறுமாறான வெற்றியை பெரும் என்று படம் பார்த்தவர்கள் கூறுவது பெரும் நம்பிக்கைஐ அனைவரிடத்திலும் கொடுத்துள்ளது. விநியோகஸ்தர்கள் சிலரும், சென்சார் குழுவை சேர்ந்தவர்களும் படத்தை பார்த்துவிட்டு இம்ப்ரஸ் ஆகிவிட்டனராம்.