ஹர்திக் மனைவி நடாஷாவை விவாகரத்து செய்ய இவர் தான் காரணம்!! விளாசும் நெட்டிசன்கள்..

Hardik Pandya Indian Cricket Team
By Edward Jul 19, 2024 07:30 AM GMT
Edward

Edward

in Cricket
Report

ஐபிஎல் 2024 போட்டியில் கேப்டனாக இருந்து தோல்விகளை சந்தித்த ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் பலர் வெறுத்து கேலி செய்து வந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடந்து முடிந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வெற்றி பெற ஹர்திக் பாண்டியா மிக முக்கிய காரணமாக அமைந்தார். கடந்த 2020-ல் செர்பியாவை சேர்ந்த மாடல் நடிகையான நடாஷா ஸ்டான்கோவிச் என்பவரை காதலித்து லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

ஹர்திக் மனைவி நடாஷாவை விவாகரத்து செய்ய இவர் தான் காரணம்!! விளாசும் நெட்டிசன்கள்.. | Divorce Netizens Support Hardik Troll Natasa

நடாஷா கர்ப்பமாகிய சில மாதத்தில் ஹர்திக் பாண்டியா திருமணம் செய்தார். திருமணமாகி ஒரு குழந்தை பெற்று இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். உலக கோப்பை 2024 தொடர் ஆரம்பிக்கும் முன்பே இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விவாகரத்து செய்யவுள்ளார்கள் என்று செய்திகள் கசிய ஆரம்பித்தது.

தற்போது இருவரும் அதிகாரப்பூர்வமாகவும், சமரசத்துடன் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாகவும் கூறி அறிக்கையை இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த தகவல் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ஹர்திக் மனைவி நடாஷாவை விவாகரத்து செய்ய இவர் தான் காரணம்!! விளாசும் நெட்டிசன்கள்.. | Divorce Netizens Support Hardik Troll Natasa

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா, நடாஷாவை விவாகரத்து செய்ய காரணம் யார் என்ற தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆண் நண்பர் அமீத் என்பவருடன், நடாஷா ஊர் சுற்றியதை அடுத்து விவாகரத்து காரணம் அவர் தான் என்று கூறி வருகிறார்கள்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆறுதல் கூறியும், நடிகை நடாஷாவை கண்டபடி திட்டி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அமித் என்பவரை நடிகை திஷா பதானியின் காதலர் என்று கூறப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery