கணவரை விட்டு பிரிஞ்சிட்டனா! விவாகரத்து செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பிரியாமணி..

husband divorce paruthiveeran priyamani tamilactress
By Edward Nov 10, 2021 04:49 AM GMT
Report

தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் சிறு படஜெட் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பிரியாமணி. நடிகர் கார்த்திக்கின் பருத்திவீரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலபடுத்தியது. அப்படத்திற்கு தேசியவிருதும் பெற்ற பிரியாமணி தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

வயதான காரணத்தால் படவாய்ப்புகள் குறைய சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பணியாற்றி வருகிறார். கடந்த 2017ல் முஸ்தஃபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் பிரியாமணியை பலர் தற்போது கணவரை பிரிந்துள்ளார் என்ற செய்தி வைரலானது. பல நாட்களாக கணவருடன் இணைந்து புகைப்படம் எடுக்காமலும் க்ளாமருக்கு கவனம் செலுத்தி வருவதால் எழுந்த செய்திகளால் பெருயளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் நான் கணவருடன் தான் இருக்கிறேன் என்று விவாகரத்து செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் தீபாவளி அன்று கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.