விவாகரத்துக்கு பின் அந்த நடிகைக்கு வாய்ப்பில்லை!! சமந்தாவை மறைமுகமாக தாக்கிய வாரிசு நடிகை
தென்னிந்திய சினிமாவில் வாரிசு நடிகையாக திகழ்ந்து தற்போது நிகழ்ச்சிகளில் நடுவராகவும் விருதுவிழாக்களை தொகுத்து வழங்கியும் வருகிறார் நடிகை லட்சுமி மஞ்சு. சமீபத்தில் அவர் நடித்த தக்ஷா படத்தின் விளம்பரத்திற்காக அளித்த பேட்டியொன்றில் யார் பெயரையும் குறிப்பிடாமல் சொன்ன விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
லட்சுமி மஞ்சு
அதில், 50 வயதாக போகிறது, இப்படி ஆடையணிகிறீர்களே என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு லட்சுமி மஞ்சு, நான் அமெரிக்காவில் வசித்தேன், தற்போது மும்பையில் இருக்கிறேன். எந்த மாதிரி ஆடையணிவது என்பது என் விருப்பம். இதுவே மகேஷ் பாபுவை பார்த்து உங்களுக்கு 50 வயதாகிறது, சட்டை இல்லாமல் வருகிறீர்களே என்று கேட்பீர்களா என்று கேட்டுள்ளார்.
மேலும், லட்சுமி மஞ்சுவின் பதிலை கேட்ட செய்தியாளர், இல்லை, சமூக வலைத்தளங்களில் உங்களின் உடை தேர்வை பற்றி பேசுகிறார்களே என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் விமர்சிக்கிறார்கள்.
சமந்தா
சூப்பர் ஸ்டாரின் முன்னாள் மனைவி ஒருவர் இருக்கிறார். அவருக்கு விவாகரத்தாகிவிட்டது. அதிலிருந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறது. அவரை ஒப்பந்தம் செய்த படங்களில் இருந்துகூட நீக்கிவிட்டார்கள்.
உங்களை எங்கள் படத்தில் நடிக்கவைத்தால் அவர் ஏதாவது நினைத்துக்கொள்வார் என்று அந்த நடிகையிடம் கூறுகிறார்கள். நல்ல படங்களில் நடிக்க அந்த நடிகை தயாராக இருக்கிறார். ஆனால் வாய்ப்பு இல்லை. அவரின் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை என்று லட்சுமி மஞ்சு தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட செய்தியாளர் நீங்கள் சமந்தாவை தான் சொல்கிறீர்கள் என்று கேட்க அதற்கு தான் யாரைப்பற்றி பேசினோம் என்று உறுதி செய்யாமல், நான் சமந்தாவைப் பற்றி பேசுகிறேன் என்று நினைக்கீறீர்களா? ஆனல ஒரு சூப்பர் ஸ்டார் இல்லையே, 5, 6 பேருக்கு விவாகரத்தாகி இருக்கிறது.
அத்தனை பேரும் எனக்கு நல்ல பழக்கம், நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இது ஒரு ஆணுக்கு நடந்தால் அவரின் வாழ்க்கை மாறாது. அதுவே ஒரு பெண் திருமணமாகி, குழந்தைகள் பெற்றுவிட்டால் பொறுப்பு அதிகமாகிவிடுகிறது என்று கூறியிருக்கிறார்.
இதற்கு பலரும் சமந்தாவை தான் குறிப்பிடுகிறார், ஏனென்றால் அவருக்கு தான் வாய்ப்புகள் இல்லை, ஒப்பந்தம் செய்த படத்தில் இருந்து நீக்கிவிட்டனர் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.