கேன்சர் இருக்கும் போதே ஆடும் DJD Reloaded 3 சந்துரு!! மெய்சிலிர்க்க வைத்த நடிகர் சரத்குமார்
DJD Reloaded 3 சந்துரு
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் மிகப்பெரியளவில் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அப்படி ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3 நிகழ்ச்சிகள் இணைந்து மகா சங்கமத்தை கடந்த வாரம் நடத்தியிருந்தனர்.
மெய்சிலிர்க்கும் வண்ணம் பல நிகழ்வுகள் மகா சங்கமம் நிகழ்ச்சியில் இடம்பெற்றது. அதில், புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வரும் சந்துரு, டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடனமாடி வருகிறார்.
அந்த கஷ்டத்திலும் தன்னுடைய நடனத்தால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் போட்டியாளர் சந்துரு.
சரத்குமார்
மகா சங்கமம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்த நடிகர் சரத்குமார், சந்துருவின் நிலையை அறிந்து நிகழ்ச்சியில் அவரை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதன்பின் சந்துருவை அழைத்து என் படத்தில் நீ என்னுடன் நடிக்கிறாய்.
அடுத்து நாங்கள் தயாரிக்கும் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள், அதற்கான அட்வான்ஸ் தொகையை இப்போதே தருகிறேன் என்று சரத்குமார் கொடுத்துள்ளார்.