ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க துப்பில்லை.. ஊருக்கு உபதேசம் செய்து ரவுண்ட் அடிக்கும் கண்ணம்மா

Bharathi Kannamma Serials
By Edward Oct 06, 2022 06:15 AM GMT
Report

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. ஒரு கதையை அங்கும் இங்குமாக கதையை வளைத்து வளைத்து எடுத்து வருகிறார் சீரியல் இயக்குனர்.

தற்போது பீஸ்ட் படபாணியில் மருத்துவமனையை தீவிரவாதிகள் ஹைஜேக் செய்துவிடும் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கிறது. தீவிரவாதிகளின் ஹைஜேக், வெண்பா கர்ப்பத்திற்கு பாரதி கல்யாணம் செய்ய ஒத்துக்கொண்டது எல்லாம் கடந்த வாரம் வரை நடந்து வந்தது.

இந்த வாரம் பாரதியின் மருத்துவமனைக்கு ஒரு பெண் பிரசவத்திற்காக வர, அது என் குழந்தை இல்லை என்று அவரது கணவர் கூச்சலிடுகிறார். அப்போது பாரதி இதற்கு ஒரே வழி டி என் ஏ டெஸ்ட் எடுப்பது தான் என்று அவருக்கு அறிவுரை கூறுகிறார்.

ஊருக்குத்தான் உபதேசம் செய்றீங்க உங்க சந்தேகத்துக்கு எப்படி விடை கிடைக்கும் என்று கண்ணம்மா சராமாறியாக கேட்கிறார்.

இதனால் சற்று யோசித்த பாரதி வெண்பாவை திருமணம் செய்வதற்கு முன் இந்த டி என் ஏ டெஸ்ட் எடுப்பாரா? அப்படி எடுத்தால் இந்த சீரியல் சீக்கிரமே முடியுமே என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.