ஆர்யாவுக்கு நடிகை தபு மாமியாரா! வெளிச்சத்துக்கு வந்த சாயிஷாவின் குடும்ப உறவுமுறை..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஆர்யா, கடந்த 2019ல் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் மொத்தம் 17 வயது வித்தியாசம் இருந்தும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் திருமணம் செய்து ஒரு மகளை பெற்றெடுத்தனர்.

இந்நிலையில் நடிகர் ஆர்யாவுக்கு நடிகை தபு மாமியார் முறை வருகிறதாம். படத்தில் கிடையாது நிஜத்தில் ஆர்யாவுக்கு மாமியாராம் நடிகை தபு. இந்த விளக்கம் சற்று குழப்பமாக இருந்தாலும் சற்று விளக்கமாக படித்தால் அனைவருக்கும் உறவு முறை என்ன என்று தெரியவரும்.
அதாவது, சாயிஷாவின் அப்பா நடிகர் சுமீத் சாஹல், அவரது அம்மா ஷஹீன் பானு. 1990ல் சுமீத், சாயிஷாவின் அம்மாவை திருமணம் செய்து 2003ல் விவாகரத்து வாங்கிவிட்டார்.

உறவு முறை
சாயிஷாவின் அம்மா ஷஹீன் பானு, இந்தி நடிகை சாய்ரா பானுவின் சகோதரர் சுல்தான் அகமதுவின் மகளாம். ஷஹீனுக்கு சொந்த அத்தை சாய்ரா பானு. அவரின் கணவர் முதல் கான் திலீப் குமார். அவரின் சகோதரர் நஸீர் கானின் இரண்டாம் மனைவி பேகம் பரா. அவரின் சகோதரர் மகள் தான் நடிகை ருக்ஷானா சுல்தானா.

அவரின் மகள் அமிர்தா சிங்கை தான் சைஃப் அலிகானின் முதல் மனைவி. அவரின் மாமியார் நடிகை ஷர்மிளா டாகூர். அமிர்தா சிங்கின் மாமனார் மன்சூர் அலிகான் பட்டோடி. சைஃப் அலிகானின் இரண்டாம் மனைவி நடிகை கரீனா கபூர்.
மாமியாராம் நடிகை தபு
அப்படி என்றால் சாயிஷாவின் அப்பா சுமீத் மனைவி ஷஹீனை விவாகரத்து செய்து ஃபர்ரா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவர் தான் ஆர்யாவுக்கு மாமியார் முறை என்றால் ஃபர்ராவின் அக்கா நடிகை தபுவும் அவருக்கு மாமியார் முறை தான்.

அப்படி ஆர்யா - சாயிஷாவின் உறவு முறையில் சாய்ரா பானு, சைஃப் அலிகானில் இருந்து ஆரம்பித்து ஹிருத்திக் ரோஷன், கரீனா கபூர் வரை அவர்களுக்கு சொந்தக்காரர்களாகிவிட்டார்களாம்.