பிரைவேட் ஜெட் வைத்திருந்த முதல் தமிழ் நடிகை.. நயன்தாரா, த்ரிஷா இல்லை, அட இவரா?
Nayanthara
Trisha
Tamil Cinema
By Bhavya
பிரைவேட் ஜெட்
இந்திய திரையுலகில் தற்போது பல நடிகர் மற்றும் நடிகைகள் பிரைவேட் ஆக விமானம் வைத்திருக்கின்றனர். அந்த வகையில், தற்போது தனி விமானம் வைத்திருந்த ஒரு தமிழ் நடிகை குறித்து பார்க்கலாம்.
அந்த நடிகை, த்ரிஷா, சமந்தா இல்லை. அந்த காலத்தில் திரையுலகின் உச்சத்தில் வலம் வந்த நடிகை தான் தனி விமானம் வைத்திருந்தார்.
அட இவரா?
தனி விமானம் வாங்கிய முதல் தமிழ் நடிகை வேறு யாருமில்லை, நடிகை கே.ஆர்.விஜயா தான்.
சுமார் 60 ஆண்டுகள் திரையுலகில் நடித்து வந்த இவர், ஒரு காலத்தில் தமிழில் கொடிக்கட்டி பறந்த நடிகை. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
அப்போது, தனக்கென்று இருந்த தனி விமானத்தில் படப்பிடிப்பிற்கு சென்ற அனுபவத்தை பேட்டி ஒன்றில் கே.ஆர்.விஜயா பகிர்ந்திருந்தார்.