வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவா இப்படி.. அட அடுத்த நாயகி ரெடி

Ajith Kumar Tamil Cinema Tamil Actress
By Bhavya May 22, 2025 09:30 AM GMT
Report

வீரம் 

சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முதலில் தல அஜித் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் வீரம். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து தமன்னா, சந்தானம், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரகள் நடித்திருந்தனர்.

கடந்த 2014ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அண்ணன்- தம்பிகள் அவர்களுக்குள் இருக்கும் பாசம், காதல், அதிரடி ஆக்ஷன், காமெடி என எல்லாம் கலந்த கலவையாக இப்படம் வெளியானது.

வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவா இப்படி.. அட அடுத்த நாயகி ரெடி | Do You Know Who This Childhood Actress

யுவினா

இதனால் விமர்சனம் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் யுவினா.

குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்து ரசித்தவர் இப்போது முன்னணி நாயகி ரேஞ்சிற்கு வளர்ந்துவிட்டார்.

தற்போது அவரின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை கண்ட ரசிகர்கள் அடுத்த நாயகி ரெடி ஆகிவிட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவா இப்படி.. அட அடுத்த நாயகி ரெடி | Do You Know Who This Childhood Actress