நெப்போலியன் மகன் திருமண குறித்து வெளியான தகவல்!! எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்த மருத்துவர்..
பிரபல நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் தகவல்கள் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது. நெப்போலியனின் மூத்த மகனான தனுஷ், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிறு வயதில் இருந்தே நடக்க முடியாமல் இருக்கிறார். அவருடைய சிகிச்சைக்காக நெப்போலியன் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்தச் சூழலில் தனுஷுக்கு திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.
இவர்கள் நிச்சயதார்த்தம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பேசிய பிரபல பத்திரிக்கையாளரும் மருத்துவருமான காந்தராஜ் உள்ளிட்ட பலர், நெப்போலியன் மகன் தனுஷ் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாது. அவருக்கும் இருக்கும் பிரச்சனை எல்லாம் மணப்பெண்ணுக்கு சொல்லி தான் திருமணம் ஏற்பாடு நடத்தி இருப்பார்கள்.
இந்நிலையில் நடிகர் நெப்போலியன் கட்டியுள்ள மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் டேனியல் நெப்போலியன் திருமணம் பற்றியும் இல்லற வாழ்க்கை பற்றியும் பகிர்ந்துள்ளார். மகனுக்கு திருமணம் செய்ய இருப்பது குறித்து மருத்துவரிடம் நெப்போலியன் உரிய ஆலோசனை செய்தார். அதன்பின், தனுஷுக்கு பெண் பார்க்கப்பட்டது. தசை சிதைவு நோயால் பாதித்தவர்களால் திருமணம் செய்ய முடியாது, இல்லறத்தில் ஈடுபட முடியாது என்பது உண்மை கிடையாது.
சிலர் திருமணம் செய்துகொண்டு குழந்தை குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். தனுஷுக்கு சிறு வயதிலேயே இந்த நோய் கண்டு பிடிக்கப்பட்டால், அவருக்கு கொடுக்கும் சிகிச்சை காலத்தை பொறுத்து இந்த நோயின் தன்மை இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனை பெற்றுத்தான் திருமண ஏற்பாடுகள் நடந்தது.
தனுஷும் அக்ஷயாவும் ஒருவரை ஒருவர் போனில் பரஸ்பரமாக பேசிக்கொண்டு தான் இந்த திருமண முடிவை எடுத்தார்கள். அந்த பொண்ணுக்கு இந்த நோய் குறித்தும் தனுஷ் குறித்தும் முழுமையாக தெரியும் என்று மயோபதி மருத்துவர் விளக்கமாக கூறியிருக்கிறார்.