சோழனிடம் காதலை கூறிவிட்டாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு வீடியோ
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் அய்யனார் துணை. TRP-யில் இந்த சீரியல் டாப்பில் தற்போது உள்ளது.
இந்த சீரியலில் தற்போது பல்லவன் போலீசில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக நிலா சொந்த பிசினஸ் தொடங்க ரூ. 5 லட்சம் தேவை என்பதால் அந்த பணத்தை ஏற்பாடு செய்ய குடும்பமாக முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களின் முயற்சி விரைவில் கைகொடுக்கிறதா? நிலா சொந்தமாக பிசினஸ் தொடங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில், அய்யனார் துணை சீரியல் குறித்து ஒரு சூப்பரான படப்பிடிப்பு தள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில் சோழன்-நிலா இருவரும் கடற்கரையில் இருக்கிறார்கள், நிலா தலையில் பூ இருக்க, இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள், கடற்கரையில் இருவரும் இருப்பதை பார்க்கும் போது நிலா, சோழனிடம் தனது காதலை கூறிவிட்டாரோ என கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால், எபிசோட் வந்தால்தான் அது என்ன காட்சி என்று தெரியும்.
இதோ அந்த வீடியோ: