சல்மான் கான் படத்தால் ராஷ்மிகா மந்தனாவிற்கு ஏற்பட்ட நிலைமை.. இப்படி ஆகிருச்சே
ரசிகர்களால் நேஷ்னல் க்ரஷ் என அழைக்கப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அனிமல், புஷ்பா 2, சாவா என தொடர்ந்து வசூலில் மாபெரும் வெற்றி படங்களை ராஷ்மிகா மந்தனா கொடுத்து வந்தார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சிக்கந்தர். ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை இயக்க சல்மான் கானின் ஜோடியாக இப்படத்தில் நடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் படுதோல்வியை சந்தித்தது.
இதனால் மிகப்பெரிய பட வாய்ப்பை ராஷ்மிகா இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபாஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் ஸ்பிரிட். இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், தற்போது சிக்கந்தர் படத்தின் படுதோல்வி காரணமாக ஸ்பிரிட் படத்திலிருந்து ராஷ்மிகாவை வெளியேற்றிவிட்டதாக பேசப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.