ஆபாச மார்ஃபிங்!! நான் ஏன் சாகணு, நீ சாவு!! சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் பேச்சு.

Tamil Actress Actress Deepfake Video Gabrella Sellus
By Edward Mar 18, 2026 02:30 AM GMT
Report

கேப்ரியல்லா செல்லஸ்

சுந்தரி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் தான் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். கடந்த 2024 இறுதியில் இந்த சீரியல் நிறைவடைந்ததை அடுத்து, தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அதன்பின் நடிப்பில் இருந்து விலகி இருந்த கேப்ரியல்லா, கணவருடன் இணைந்து நடிப்பு கலையை கற்றுக்கொடுத்து வருகிறார்.

ஆபாச மார்ஃபிங்!! நான் ஏன் சாகணு, நீ சாவு!! சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் பேச்சு. | Gabrella Sellus Shared Her Opinion About Morphing

சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து மீண்டும் இணைதள பக்கம் வந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், மகளிர் தினத்தன்று கல்லூரி ஒன்றுக்கு சென்று கேப்ரியல்லா பேசிய வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

ஆபாச மார்ஃபிங்

ஒரு ஆபாசமான போட்டோவில் என் முகத்தை வைத்து பதிவிட்டு இருந்தார்கள். முகம் மட்டும் என்னுடையது, அந்த உடல் என்னுடையது இல்லை. அதை நான் இணையத்தில் பார்த்துவிட்டு கடந்துதான் சென்றேன்.

ஆபாச மார்ஃபிங்!! நான் ஏன் சாகணு, நீ சாவு!! சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் பேச்சு. | Gabrella Sellus Shared Her Opinion About Morphing

ஏனென்றால், எனக்கு தெரியும் அது என் உடல் இல்லை, மற்றவர்கள் செய்யும் கீழ்த்தனமான, அசிங்கத்திற்கு நாம் ஏன் வேதனைப்பட வேண்டும். மற்றவர்கள் செய்யும் தவறு, கீழ்த்தனமான செயலுக்கு நாம் ஏன் வருத்தப்பட வேண்டும், சாகவேண்டும்.

அவன் செய்த தவறுக்கு அவன் சாக வேண்டும், கர்மாவை அவன் அனுபவிப்பான், தவறாக முடிவை எப்போதும் எந்த சூழ்நிலையிலும் எடுக்காதீர்கள். இது போன்ற சூழ்நிலையில்தான் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று கேப்ரியல்லா பேசியுள்ளார்.