டான் படத்துக்கு வந்த சோதனை? பிரியங்கா மோகனையும் விட்டுவைக்காத நெட்டிசன்கள்..
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அட்லியின் உதவி இயக்குனராக இருந்த சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவான படம் டான். கல்லூரி வாழ்க்கை பற்றியும் அப்பா, மகன் உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டமாக கடந்த மே 13 ஆம் தேதி வெளியாகியது.
படம் வெளியாகி இதுவரையில் 110 கோடி வசூலை தாண்டியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்று வருகிறது. அதிலும் இப்படத்தின் காமெடியை விட கிளைமேக்ஸ் காட்சியில் சமுத்திரகனி மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பு மக்களிடம் பெற்றது.
பல எமோஷ்னல் காட்சிகள் சிவகார்த்திகேயனுக்கு வைத்திருப்பதை போல் படத்தின் கதாநாயகி பிரியங்கா மோகனுக்கும் வைத்திருந்தனர். தியேட்டர் அப்பாவின் கோபம் அடங்க பிரியங்காவிற்கு சிவகார்த்திகேயன் உதவி ஒரு வீடியோவை வெளியிடுவார்.
இந்த காட்சியும் ரசிகர்களிடம் நல்ல ஆதரவை பெற்றது. இந்த காட்சியை போன்று சமீபத்தில் கிளைமேக்ஸ் காட்சியை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்.
அதேபோல் இந்த காட்சியையும் ரஜினிகாந்தின் வெகேஷன் படத்தினை வைத்து கேலி செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த சீனையும் விட்டு வைக்கலையா என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.