யார் வயித்தெரிச்சலையும் கொட்டிக்காதீங்க!! யோகி பாபு ஆதங்கம்
Gossip Today
Actors
Yogi Babu
Tamil Actors
By Edward
யோகி பாபு
தமிழ் சினிமாவில் டாப் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் யோகி பாபு, தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். நடிகர் ரவி மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடிகவுள்ளார் என்ற தகவல் வெளியானது.
சமீபத்தில் தூய்மை பணி விழிப்புணர்வு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட வீடியோவில் யோகி பாபு நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், மத்தவங்க வயித்தெரிச்சலை கொட்டிட்டு, நாம் வாங்குற பணமும் சாப்பிடுற சாப்பாடும் அதோட விளைவு இன்னைக்கு தெரியாது.
அந்த வலி உனக்கு வராது, பின்னாடி உன்னோட சந்ததிக்கு வரும்போது தெரியும். யாரோட வயித்தெரிச்சலையும் கொட்டிக்க கூடாது என்று யோகி பாபு பகிர்ந்துள்ளார். அவர் யாரை இப்படி மதிப்பிட்டு கூறினார் என்று ரசிகர்கள் யோசித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.