அதை’ஐட்டம் சாங்’-னு சொல்லாதீங்க..பெண்ணுக்கு மரியாதை அல்ல!! தமன்னா ஆதங்கம்..

Tamannaah Bollywood Indian Actress Tamil Actress
By Jai Jun 25, 2026 03:54 AM GMT
Report

தமன்னா

கேடி, வியாபாரி, கல்லூரி, பையா, அயன், படிக்காதவன், சுறா, சிறுத்தை போன்ற படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் நடிகை தமன்னா. தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக ஜொலித்து வருகிறார்.

அதை’ஐட்டம் சாங்’-னு சொல்லாதீங்க..பெண்ணுக்கு மரியாதை அல்ல!! தமன்னா ஆதங்கம்.. | Dont Call It An Item Song Tamannaah Strong

நடிப்பை தாண்டி பிசினஸிலும் ஈடுபட்டு சம்பாதித்து வரும் தமன்னா, பாலிவுட், சவுத் படங்களில் நடித்தது குறித்த கருத்தினை பகிர்ந்திருந்தார்.

ஐட்டம் சாங்

திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களை ஐட்டம் சாங் என்று அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை. அந்த சொல் பெண்களுக்கு மரியாதைக்குரியது அல்ல.

ஒரு பாடலுக்காக நாங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். அதை ஐட்டம் என்று அழைப்பது அப்பெண்ணின் உழைப்புக்கு அளிக்கும் மரியாதை அல்ல, இந்த அணுகுமுறையில் மாற்றம் வரவேண்டும்.

அதை’ஐட்டம் சாங்’-னு சொல்லாதீங்க..பெண்ணுக்கு மரியாதை அல்ல!! தமன்னா ஆதங்கம்.. | Dont Call It An Item Song Tamannaah Strong

நடிகைகளை வெறும் கவர்ச்சி பொருளாக பார்க்காமல் அவர்களின் நடிப்பு திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் இதை சிலர் தவறான தோற்றத்தில் சித்தரித்து பரப்பி வருகிறார்கள் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கியுள்ளார் தமன்னா.