நான் செத்தப்பின் அசிங்கமான போட்டோ போடாதீங்க..ஏன்னா!! நடிகை மும்தாஜ் ஆதங்கம்..
மும்தாஜ்
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மும்தாஜ். ஆரம்பத்தில் கிளாமராக நடித்து வந்த மும்தாஸ், வாய்ப்பிழந்து பிக்பாஸ் சீசன் முதலில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அதன்பின் சினிமாவில் இருந்து விலகி முழுவதுமாக இறைவழிபாட்டிலும் ஆன்மீகத்திலும் இறங்கிவிட்டார் மும்தாஜ். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மும்தாஜ், ஆன்மீகம் பற்றிய வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நான் சிறுவயதில் என் மதப்புத்தகமான குறானில் என்னவுள்ளது என தெரிந்து கொள்ளாமல் போய்விட்டேன். அதனைப் படித்திருந்தாலும் அதன் அர்த்தங்கள் எனக்குத் தெரியவில்லை.
இன்று நான் இப்படி மாறியுள்ளேன் என்றால், குறானில் எனக்கு சொல்லப்பட்டது என்ன என்பதை நான் புரிந்து கொண்டேன். என்னால் கடந்த காலத்தை மாற்றமுடியாது, எனவே நான் என் நிகழ்காலத்தில் அல்லாவுக்கு நெருக்கமானவளாக இருக்க முயற்சிக்கிறேன்.
ஒரு கோரிக்கை
நான் அனைவரிடமும் வைக்கும் ஒரு கோரிக்கை, நான் இறந்தப்பின் என் அசிங்கமான, அதாவது கவர்ச்சியான கிளாமரான புகைப்படங்களை பகிரவேண்டாம்.
என் கடைசி ஆசையாக இதனை எடுத்துக்கொள்ளுங்கள், நீங்கள் என் அசிங்கமான புகைப்படங்களை பகிர்ந்தால், அது என் மரணத்திலும் எனக்கு வலியை கொடுக்கும் என்று ஆதங்கமாக பேசியிருக்கிறார் முன்னாள் நடிகை மும்தாஜ்.