வயது வித்தியாசம் குறித்த கேள்வி, கொந்தளித்த நடிகை மாளவிகா மோகனன்
Malavika Mohanan
By Yathrika
மாளவிகா மோகனன்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் மாளவிகா மோகனன்.
பிரபாஸ் ஜோடியாக தி ராஜாசாப் படத்திலும் கார்த்தி ஜோடியாக சர்தார் 2 படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ஹிருதயபூர்வம் படத்தில் நடிக்கிறார்.
64 வயதுடைய நடிகர் மோகன்லாலுடன் 32 வயதான நடிகை நடிக்கிறார் என விமர்சனம் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாளவிகா ஒரு பேட்டியில், நடிகைகளிடம் வயது குறித்தோ, வயது வித்தியாசம் குறித்தோ முதலில் பேசவே கூடாது. எதையாவது பேசுவதை முதலில் நிறுத்துங்கள்.
சினிமாவில் திறமையை பார்க்க வேண்டுமே தவிர, அர்த்தமற்ற விஷயங்கள் குறித்து ஆராயக்கூடாது என்று கொந்தளித்துள்ளார்.