டைட்டிலை இப்படியா வைப்பீங்க! சர்ச்சையை கிளப்பிய அந்த மாதிரி படங்கள்..
சினிமாவை பொருத்தவரை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப க்ளாமர் காட்சிகள் இல்லாமல் படங்கள் வெளியாகுவது கிடையாது. முன்னணி நடிகர்கள் படங்களில் கூட எதாவது காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தும். க்ளாமர் இரட்டை வசனத்திற்கு என்றே சில இயக்குனர்கள் படங்களை எடுத்து வருகிறார்கள்.
அந்தவரிசையில் தமிழ் சினிமாவில் அந்தமாதிரி படங்களாக வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கொடுத்த படங்களை என்ன என்று பார்ப்போம்.
டைட்டில்களே படத்தின் தன்மை என்று கூறும் அளவிற்கு சர்ச்சையை கொடுத்த படமாக இருந்தது, பல்லு படாம பாத்துக்க. விஜய் வரதராஜ் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ்ச சஞ்சிதா செட்டி நடிப்பில் வெளியான படமாக இருந்தது. படம் முழுவதும் டபுள் மீனிங் காட்சிகளால் சர்ச்சையாகியது.
அப்படத்தினை அடுத்து கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியானது இருட்டு அறையில் முரட்டு குத்து. பேயை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை இளைஞர்களுக்கு கொடுத்தது.
இயக்குனர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் ஆடியோ லாண்ட் நிகழ்ச்சி நடைபெற்றது கடலை போட பொண்ணு வேணும் படம். அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடிப்பில் வெளியாகவுள்ளது. இதுபோல் தமிழ் சினிமாவில் சாதாரணமாகவே இரட்டை அர்த்த வசனங்களை கதையாசிரியர்கள் வேண்டும் என்றே வைத்து வருகிறார்கள்.