என்னடா டான்-க்கு வந்த சோதனை? இப்படி நடந்து கொண்ட சமுத்திரகனி..
டாக்டர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி நடிப்பில் வெளியான படம் டான். மே 13 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அப்பா மகன் மற்றும் கல்லூரி காலத்தில் செய்யும் அரட்டைகளை பற்றி எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை பெற்றது. இப்படத்தில் காமெடிகள் நிறைந்திருந்தாலும், எஸ்ஜே சூர்யா மற்றும் சமுத்திரகனியின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பும் பாராட்டும் பெற்றது.
சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்த சமுத்திரகனி க்ளைமேக்ஸில் இறந்துவிடுவார். அந்த காட்சி மிகவும் உருவ வைத்து அழ வைத்த சீனாக அமைந்தது. அப்படியொரு சீனில் சிவகார்த்திகேயன் அப்பாவை கட்டியணைத்து அழுவார்.
அப்போது சமுத்திரகனி சிரித்துவிடுவார். எவ்வளவு முக்கியமான காட்சி சமயத்தில் சமுத்திரகனி இப்படி செய்ததால் திரும்பவும் அந்த காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.