டிராகன் 100 கோடி வசூல் வேட்டை!! பிரதீப், அஸ்வத்துக்கு பார்ட்டி வைத்த தயாரிப்பாளர்..

Pradeep Ranganathan Dragon AGS Entertainment
By Edward Mar 05, 2025 07:30 AM GMT
Report

டிராகன் 100 கோடி

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், விஜே சுத்து உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான படம் டிராகன்.

டிராகன் 100 கோடி வசூல் வேட்டை!! பிரதீப், அஸ்வத்துக்கு பார்ட்டி வைத்த தயாரிப்பாளர்.. | Dragon 100 Crore Boxoffice Kalpana Party Pradeep

மிகப்பெரிய ஆதரவையும் விமர்சனத்தையும் பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் டிராகன் படம் கடந்த வாரம் 50 கோடிக்கும் மேல் வசூலித்தது. படம் வெளியாகி தற்போது 12 நாட்களான நிலையில் படம் இதுவரை 113 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து வருகிறதாம்.

ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் நடித்து இயக்கிய லவ் டுடே படமும் 100 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

டிராகன் 100 கோடி வசூல் வேட்டை!! பிரதீப், அஸ்வத்துக்கு பார்ட்டி வைத்த தயாரிப்பாளர்.. | Dragon 100 Crore Boxoffice Kalpana Party Pradeep

இந்நிலையில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸை பெற்றதால் இயக்குநர் அஸ்வத், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு ஏஜிஎஸ் நிறுவனர் அர்ச்சனா கல்பதி பார்ட்டி கொடுத்து கொண்டாடியிருக்கிறார்.