பட்டையை கிளப்பும் டிராகன்.. இதுவரை இத்தனை கோடி வசூலா

Pradeep Anthony Box office Dragon Kayadu Lohar
By Karthick Raja Mar 07, 2025 07:30 AM GMT
Report

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் நாளுக்கு நாள் வசூலை வாரிக்குவித்து கொண்டு இருக்கிறது.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர். லவ் டுடே படத்தை தொடர்ந்து மீண்டும் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஏஜிஎஸ் தயாரிக்கும் படம் இது.

பட்டையை கிளப்பும் டிராகன்.. இதுவரை இத்தனை கோடி வசூலா | Dragon 14 Days Box Office

கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளிவந்த இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படம் 10 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இந்த நிலையில், 14 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள டிராகன் படம் உலகளவில் ரூ. 125 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்டிப்பாக ரூ. 150 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.