50 கோடியை தாண்டிய டிராகன்!! தனுஷின் NEEK பாக்ஸ் ஆபி எவ்வளவு தெரியுமா?..
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
நடிகர் தனுஷ் நடிப்பை தாண்டி தற்போது படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். ராயன் படத்தை தொடர்ந்து அவர் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் சமீபத்தில் ரிலீஸாகியது. தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
மேலும் அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்துடன் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் படம் ஒரே நாளில் ரிலீஸாகியது. இரு படங்களும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் கொஞ்சம் அடிவாங்கியிருக்கிறதாம்.
டிராகன் vs NEEK
ரிலீஸான 4 நாட்களில் நிலவுக்கு என்மேல் என்னடி கொபம் படம் உலகளவில் வெறும் 7 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. ஆனால் டிராகன் படம் ரிலீஸான 4 நாட்களில் ரூ. 59 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது. கூடிய விரைவில் டிராகன் படம் 100 கோடியை தொடும் என்றும் கூறப்படுகிறது.