கமல்ஹாசனுக்கும் அதற்கும் ஏழரையாக இருக்குமோ ! 2 என்றாலே இப்படிதான் ஆகுதாம்!
தமிழ் சினிமாவில் ரீமேக் படமாக வெளியாகி பெரிய வெற்றியை கண்டவர் இயக்குநர் ஜீத்து ஜோசப். மலையாளத்தில் திரிஷ்யம் படத்தினை வெளியிட்டு பெரிய ஹிட் கொடுத்தது போல், நடிகர் கமல்ஹாசன், கெளதமி, நிவேதா தாமஸை வைத்து பாபநாசம் படத்தை இயக்கினார். இரு மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததை அடுத்து திரிஷ்யம் 2வையும் இயக்கி ஹிட் கொடுத்தார்.
அதில் இரு பாகத்திலும் நடிகை மீனாவை வைத்து இயக்கினார் ஜீத்து ஜோசப். மீனாவிற்கு ஏற்பவே கதையை எழுதியிருந்த இயக்குநர், தமிழில் கெளதமிக்கு தான் முதல் பாகத்தை எழுதியிருந்துள்ளார்.
அப்படி திரிஷ்யம் 2வை அடுத்து பாபநாசம் 2வை இயக்க இயக்கவில்லை என்று கூறியுள்ளார் இயக்குநர் ஜீத்து ஜோசப். பாபநாசம் படத்திற்கு பிறகு கமலும், கவுதமியும் பிரிந்துவிட்டதால் இப்படி ஒரு முடிவு என்று கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை. த்ரிஷ்யம் 2 படம் தமிழில் ரீமேக் செய்யப்படாது என்று ஜீத்து ஜோசப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
திரிஷ்யம் 2 படத்தை தமிழில் ரீமேக் செய்தால் கவுதமிக்கு பதில் வேறு ஒருவரை நடிக்க வைக்க வேண்டும். அதனால், திரைக்கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் அதை ரீமேக் செய்யாமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்துள்ளேன் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார்.
இதனால் கமலுக்கு 2ஆம் பாகம் என்றாலே ஏழரையாக அமைந்து வருகிறதே என்று கூறி வருகிறார்கள் சினிமா வட்டாரத்தில். அதற்கு காரணம், கமலின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் பல பிரச்சனையால் தடை பெற்று பாதியில் நிற்பதால் தானாம்.