அருவருப்பாக இருக்கிறது..நாற்றம் அடிக்கிறது!! திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி..

Trisha Tamil Actress
By Jai Jul 04, 2026 11:00 AM GMT
Report

திரிஷா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, கருப்பு படத்தின் ரிலீஸுக்கு பின் விஸ்வரம்பரா, ராம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். திரைப்படத்தை தாண்டி தற்போது தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டு வரும் நபராக திரிஷா இருக்கிறார்.

அதற்கு காரணம், தற்போதைய முதலமைச்சருடன் நெருக்கமான இருந்து வருவது தான். சமீபத்தில் கூட முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடினார். தற்போது தன்னுடைய அம்மா உமா கிருஷ்ணனின் 70வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிரார் திரிஷா.

அருவருப்பாக இருக்கிறது..நாற்றம் அடிக்கிறது!! திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி.. | Trisha Slams Zara Over Foul Smelling Clothes

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு அதிர்ச்சியூட்டும் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில், ஸாரா ஆடை நிறுவனத்தை டேக் செய்து, வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும் ஆடைகளில் உடல் நாற்றம் வீசுகிறது.

இந்த வாடை லேசாகக்கூட இல்லை, தொடர்ந்து மூன்றாவது முறையாக இதே பிரச்சனை நடக்கிறது. மிகவும் அருவருப்பாக இருக்கிறது. குறைந்தபட்சம் பேக் செய்வதற்கு முன் ஆடைகளை சரிபார்த்தாவது அனுப்புங்கள் என்று திரிஷா பகிர்ந்துள்ளார்.

Gallery