போதை, சிகரெட் அடிமையால் தூக்கி எறிந்த சினிமா! நடிகை சதா இப்படிப்பட்டவரா?

தமிழ் சினிமாவில் விக்ரமின் அந்நியன் படத்தின் மூலம் பிரம்மாண்டளவில் பிரபலமானவர் நடிகை சதா. தெலுங்கு சினிமாவில் அறிமுகமான சதா தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் தமிழிலும் கவனிக்கப்படும் நாயகியாக மாறினார்.

சில படங்களில் நடித்தாலும் தொடர்ந்து சில தோல்விப் படங்களைக் கொடுத்தால் சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது 37 வயது தாண்டியும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிக்க காரணம் என்ன என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது இல்லை எனவும், எனக்கானவரை இன்னும் நான் சந்திக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், விபச்சாரியாக நடித்ததால் மார்க்கெட் குறைந்தது.

மேலு,ம் கையில் சிகரெட்டுடன் இருப்பதை நானே பார்த்திருக்கிறேன் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். எப்போதும் போதை பழக்கம் உடையவராக இருந்ததால் சினிமாவை விட்டு ஓடிவிட்டார் என்று நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். சமீபத்தில் சினிமா பிரபலங்கள் பற்றிய ரகசியங்களை போட்டுடைத்து வருகிறார். இதனால் அவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட பிரச்சனையில்லை என்றும் கூறியுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்