2வது கல்யாணத்துக்கு ரெடியான துபாய் இளவரசி!! யார் மாப்பிள்ளை தெரியுமா?
மேக்கா மஹ்ரா
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும் துபாய் ஆட்சியாளருமான முகம்மது பின் ரஷித் அல் மக்தூமின் 31 வயது மகள் மேக்கா மஹ்ரா, ஷேக் மனா பின் முகம்மது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்பவருடன் 2023ல் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு திடீரென கணவரை விவாகரத்து செய்வதாக கூறி இன்ஸ்டாகிம்ராமில் செய்தியை அறிவித்தார். குழந்தை பிறந்து இரு மாதங்களில் கணவரை விவாகரத்து செய்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
மஹ்ரா வெளியிட்ட பதிவில், வேறு சிலருடன் உறவில் நீங்கள் இருப்பதால் உங்களை விவாகரத்து செய்கிறேன் என்றும் உங்களின் உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள், இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி என்று பதிவிட்டிருந்தார்.
விவாகரத்துக்கு பின் தனிப்பட்ட விஷயத்தில் கவனம் செலுத்தி வரும் மஹ்ரா, அமெரிக்காவை சேர்ந்த ராப் இசை பாடகருடன் ஜோடியாக வலம் வந்தார்.
நிச்சயதார்த்தம்
இருவரும் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் பிரெஞ்ச் மொண்டானாவுடன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. ராப் பாடகராக இருக்கும் இவருடன் சுற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதை அடுத்து தற்போது புதிய அத்தியாத்தை தொடங்கியுள்ளனர். துபாய் இளவரசியும் ராப் இசை பாடகரும் நிச்சயதார்த்தத்தை முடித்தும் விரைவில் திருமணம் செய்யவுள்ளார்கள் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.