இரவில் மரண பயத்தை காட்டிய நபர்!..அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசிய ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 சீசன் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதில் ஹீரோவுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை மீனா வேமுரி.
இவர் பல சீரியல்களில் அம்மா, வில்லி போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மீனா வேமுரி, தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், எனக்கும் அட்ஜஸ்ட்மென்ட் அனுபவம் இருக்கிறது. சினிமா வாய்ப்பு தருவதாக கூறி அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைப்பார்கள்.
இரவு நேரத்தில் காரில் சென்று கொண்டிருக்கும் போது நான் காரை தவறாக திருப்பிவிட்டேன். பின்னாடி வந்து கொண்டிருந்த கார் திடீரென வேகமாக வந்து ஓவர்டேக் செய்து காரை நிறுத்தினர்.இதனால் நான் மிகவும் பயந்துவிட்டேன்.
இதையடுத்து நான் சம்பந்தப்பட்ட கார் ஓட்டிய நபரை நடுரோடு என்று கூட பார்க்காமல் பளார் என்று அறைந்தேன். அப்போது அங்கு இருந்தவர்கள் சமாதானப்படுத்தி எங்களை அனுப்பி வைத்தார்கள் என்று மீனா வேமுரி கூறியுள்ளார்.