கடைசி நேரத்தில் சிம்புவுக்கு ஆப்பு வைத்த கெளதம் வாசுதேவ் தேவன்.. சிக்கலில் மாட்டிவிட்ட தயாரிப்பு நிறுவனம்..
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. பல ஆண்டுகளாக மார்க்கெட் இழந்து பின் மாநாடு படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். அப்படம் 100க்கு மேல் வசூலித்த நிலையில் வெந்து தணிந்தது காடு, ஒத்த தல போன்ற படங்களில் நடிக்க கமிட்டாகினார்.
நாளை வெளியீடு
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் சிம்பு நடிப்பில் நாளை 5 மணி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

படத்தி டீசர், டிரைலர், பாடல்கள் வரவேற்பு பெற்று வந்த நிலையில் படத்தினை தடை செய்ய கோரி ஆன் இன் பிக்சர்ஸ் நிறுவனம் புகாரளித்திருந்தது. இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க 2.40 கோடி வாங்கியதாகவும் அந்த கதையை தான் வெந்து தணிந்தது காடு படமாக எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
சிக்கலில் சிம்பு
இதனால் நாளை வெளியாகவுள்ள வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸாகுவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. ஆனால் கெளம் தம் மேனன் குறித்த தயாரிப்பு நிறுவனத்துடன் சமரசம் பேசியதாகவும் திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்று கூறியுள்ளார்.