'படத்துல ஒண்ணுமே இல்லங்க, கூட்டிட்டு வந்து பழிவாங்கிட்டானுங்க'...படம் பார்த்து கதறும் ரசிகர்கள்!
கொரோனாவால் திரையரங்குகள் எல்லாம் ஒன்றரை ஆண்டுகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது திறக்கப்பட்டு டாக்டர் படத்தின் மூலம் அணைத்து தரப்பு மக்களையும் திரையரங்குகள் நோக்கி வரவழைத்திருந்தது படக்குழு.
அடுத்தடுத்து திரைப்படங்களை திரையரங்குகளில் காண எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்ததற்கு மத்தியில் தான் அண்ணாத்த மற்றும் எனிமி படங்கள் தீபாவளி நாளான நேற்று வெளியிடப்பட்டது. படத்தை காண மக்கள் கூட்டம் தியேட்டர்களின் வாசலில் குவிந்திருந்ததையும் எல்லாரும் காண முடிந்தது.
இந்த சூழ்நிலையில் தான் நேற்று வெளியான எனிமி படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் கதறுகின்றனர்.
அதிலும் ஒரு ரசிகர்,'படத்துல ஒண்ணுமே இல்லங்க friend கூட்டிடு வந்து பழிவாங்கிட்டான் இன்னும் climax-ஏ முடியல நான் வெளிய எழுந்து வந்துட்டேன்' என்று கூறும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.