எனிமிகளாக மாறிய விஷால் - ஆர்யா! இந்தபடம் தானாம்..

vishal arya enemy
By Edward Jul 07, 2021 11:50 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக பல ஆண்டுகளாக இருந்து வருபவர்கள் விஷால், ஆர்யா. இருவரும் ஆரம்பகாலத்தில் இருந்தே நல்ல நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். சமீப காலமாக தொடர்ச்சியாக ஆக்சன் படங்களில் நடித்து வரும் விஷாலுக்கு, சமீபத்தில் வெளியான சக்ரா, ஆக்சன் ஆகிய படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை.

எனிமி படத்தில் மீண்டும் ஆர்யா உடன் கூட்டணி வைத்திருப்பதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிப்பதற்கு இப்படத்தின் இயக்குனரும் ஒரு முக்கிய காரணம்.

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் தான் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் அதிரடியான ஆக்சன் படங்களை இயக்குவதில் வல்லவர். இப்படத்தில் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டன.

வரும் 9ஆம் தேதி இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. மொத்தம் 8 தினங்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரு பாடல் காட்சியும், பேட்ச் வொர்க்கும் எடுக்கப்பட உள்ளன. இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த உள்ளனர்.

எனிமிகளாக மாறிய விஷால் - ஆர்யா! இந்தபடம் தானாம்.. | Enemy Vishal Arya Movie Firstlook