வசூல் ராணியாக மாறிய சமந்தா.. எங்கள் தங்கம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, தற்போது பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள திரைப்படம் 'எங்கள் தங்கம்'.
இப்படத்தை இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். இப்படத்தை சமந்தா தனது கணவருடன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து கவுதமி, ஸ்ரீமுகி, குல்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த 19-ஆம் தேதி வெளியான 'எங்கள் தங்கம்' திரைப்படத்திற்கு முதல் நாளிலிருந்தே வசூல் குவிந்து வருகிறது. இந்த நிலையில், இப்படம் உலகளவில் 6 நாட்களில் செய்துள்ள வசூல் பற்றி விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, 6 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 54 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்து சாதனை படைக்கபோகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
