வசூலை வாரிக்குவிக்கும் எங்கள் தங்கம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
Samantha
Engal Thangam
By Karthick Raja
இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் எங்கள் தங்கம்.

இப்படத்தை இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்க, கௌதமி, ஸ்ரீமுகி, குல்ஷன் ஆகியோர் நடித்திருந்துள்ளனர். இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக சமந்தா கலக்கியிருந்தார்.

நீண்ட இடைவேளைக்கு பின் சமந்தாவின் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்பதால், ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ரசிகர்கள் இப்படத்தின் மீது வைத்திருந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, எங்கள் தங்கம் திரைப்படம் முதல் நாளிலிருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 52 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.