தனுஷ் படத்தோடு 40 வயதில் முடிந்த சகாப்தம்!! வாய்ப்புக்காக கணவரை தூதுவிட்ட தனுஷ் பட நடிகை..

Dhanush Gossip Today
By Edward Jan 30, 2023 07:30 AM GMT
Report

சினிமாவை பொறுத்தவரையில் திருமணம் மற்றும் வயது என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அப்படி டாப் இடத்தில் இருக்கும் நடிகைகள் வயதாகி ஆண்டி லுக் ஏற்பட்டாலோ அல்லது திருமணமாகிவிட்டாலும் தங்கள் வாய்ப்பினை அப்படியே இழந்துவிடுவார்கள்.

அப்படி 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தவர் நடிகை தான் அவர். சில ஆண்டுகளுக்கு முன் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அந்த சிரிப்பழகி நடிகை, சமீபத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் அம்மா கதாபாத்திரத்திலும் நடித்தார்.

அதன்பின், எந்த பட வாய்ப்பும் பெரியளவில் கைக்கூடாமல் இருந்துள்ளது. இதற்கிடையில் நடிகைக்கும் கணவர் நடிகருக்கும் விவாகரத்து பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதெல்லாம் உண்மையில்லை என்று நடிகை கணவருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தையும் பகிர்ந்து வந்தார்.

தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வரும் நடிகை, தினமும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதேசமயம் கணவரிடம் கூறி வாய்ப்பினை பெற தூதும் விட்டு இருக்கிறாராம்.

அப்படி 40 வயதில் கதாநாயகி ரோல் கிடைக்குமா என்று நெட்டிசன்கள் கூட அவரது புகைப்படத்திற்கு கருத்துக்களை கூறி கிண்டல் செய்து வருகிறார்கள்.