அந்தமாதிரி காட்சிகளுக்கு வரிசைகட்டும் இயக்குநர்கள்! பதிலடி கொடுத்து அனுப்பிய நடிகை

webseries ericafernandes
By Edward May 29, 2021 06:07 AM GMT
Report

கொரோனா லாக்டவுன் என்பதால் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகாமல் அப்படியே தள்ளி தள்ளி சென்று வருகிறது. ஆனால், ஒருசில படைப்பாளிகள் ஓடிடி தளங்கள் மூலம் படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அதில் வெப் சிரீஸ்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் பரத்தின் 555 என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை எரிகா பெர்ணாண்டஸ். மும்பை மாடலாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிப்படங்களில் நடித்து வந்தார்.

திடீரென ஒரு இந்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரம் கிடைத்ததால் அங்கு நல்ல வரவேற்பை பெற்றார். இதையடுத்து சீரியல் நடிகையாகவே மாறி இந்தியில் பல சிரீயல் வாய்ப்புகள் பெற்று நடித்தும் வருகிறார். தற்போது போல்டான கதாபாத்திரத்தில் நடிக்க தயாரென்று கூறியுள்ளார் எரிகா.

ஆனால் போல்டாக நடிக்கும் வாய்ப்புகள் பெரும்பாலும் ஆபாச காட்சிகள் நிறைந்த கதைகளையே இயக்குநர்கள் கூறி வருகிறார்கள். இதனால் கடுப்பாகிய நடிகை எரிகா, காசு சம்பாதிக்க மட்டும் நோக்கத்தோடு சிலர் படைப்பாளிகள் ஆபாச வெப்சீரிஸ் படங்களை எடுத்து வருகிறார்கள்.

இதற்கு எந்த காரணமும் இன்றி போல்டாக நடிக்க வேண்டுமென்றால் எப்படி நடிக்க முடியும் என இயக்குநர்களுக்கு பதிலடி கொடுத்து அணுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் எரிகா பெர்ணாண்டஸ்.