20 வருட அனுபவம்.. ராமரை படுகேவலமாக போயா வாயா என்று அசிங்கப்படுத்திய ஈரோடு மமேஷ்

Star Vijay Gossip Today
By Edward Oct 04, 2022 06:11 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் 10 வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்த நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. இந்நிகழ்ச்சி மூலம் பல நட்சத்திரங்கள் பிரபலங்களாக ஜொலித்து வருகிறார்கள்.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றி பிரபலமானவர் ராமர். இவரை வைத்து பல நிகழ்ச்சிகளை நடத்தியும் வந்தது. அதில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா, ஆத்தாடி என்ன உடம்பு போன்ற வசனங்கள் பட்டித்தொட்டியெங்கும் பேமஸ்தான்.

அவரை வைத்து ராமர் வீடு, சகள ரகள, ராமர் வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் டிஆர்பியில் இடம் பிடித்தது. சுமார் 20 ஆண்டுகளாக சின்னத்திரையில் தலைக்காட்டி வரும் ராமர் தன்னை மற்றவர்கள் ஏசி பேசும் போது கூட அதை மனதில் எடுத்துக்கொள்ளாமல் அதையே காமெடியாக மாற்றிவிடுவது அவரது பண்பு.

அப்படி தற்போது ராஜு வீட்ல பார்ட்டி நிகழ்ச்சியிலும் ஒரு பங்கினை ஆற்றி வருகிறார். இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு நான் ஆட்டோகாரன் என்ற நிகழ்ச்சியில் ராமரின் ஸ்கிரிப்ட்டை வைத்து ஈரோடு மகேஷ் கலாய்த்திருப்பது சற்று சங்கடத்தை கொடுத்துள்ளது.

எந்தவொரு தயாரிப்பும் இல்லாமல் மேடையில் வந்தாலே காமெடியை தருபவரை ஏன் இப்படி அசிங்கப்படுத்துகிறீர்கள் என்று நெட்டிசன்கள் திட்டி வருகிறார்கள்.