இதோ வந்துட்டாங்க 5 கோடி கோஷ்டி! சூர்யாவை வம்பிழுக்கும் கட்சியினர்..
suriya
pmk
sunpictures
jaibhim
etharkkum thunindhavan
By Edward
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு 2021ல் வெளியான படம் ஜெய்பீம். இப்படம் வன்னியர் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் வண்ணம் காட்சிகள் எடுத்திருப்பதாக கூறி புகாரளிக்கப்பட்டு பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர் பாமக கட்சியினர்.
இதைதொடர்ந்து சூர்யா நடிப்பில் 10 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ள எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகக்கூடாது என கடலூர் மாவட்டத்தில் பாமகவை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.
ஏற்கனவே ஜெய் பீம் படத்தின் போது 5 கோடி நஷ்ட ஈடு கேட்டதை வைத்து இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். தற்போது எதற்கும் துணிந்தவன் படத்திற்காக எத்தனை கோடி வருவாங்களோ என்று கிண்டலான கருத்துக்களை ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.