நீச்சல் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட எதிர்நீச்சல் நடிகை ஹரிபிரியா.. ஷாக்கான ரசிகர்கள்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் கடந்த ஆண்டு முதல் இன்று வரை ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றும் வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹரிபிரியா இசை.

நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹரிபிரியா கனா காணும் காலங்கள், லட்சுமி வந்தாச்சு, பிரியமானவள், கண்மணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை 2012ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
20 வயதில் காதலித்து திருமணம் செய்து ஒரு குழந்தையை பெற்றெடுத்த ஹரிபிரியா, விக்னேஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
அதன்பின் சீரியலில் கவனம் செலுத்தி வந்த ஹரிபிரியா, எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இந்தோனேசியாவில் இருக்கும் பாலி தீவிற்கு சென்றுள்ள ஹரிபிரியா, நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டே சாப்பிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.