ஜனனி vs குணசேகரன் இறுதியுத்தம், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜெயித்தது யார்?
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பின் உச்சமாக தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தர்ஷன் மற்றும் பார்கவி திருமணத்தை நடத்த வேண்டும் என்பதில் பெண்கள் அணி பல முயற்சிகள் செய்து வருகின்றனர்.
தற்போது, ஜனனி ஜீவானந்தம் குண்டடிபட்டதை பார்த்து கண்ணீர்விட்டு அழுகிறார். மறுபக்கம், ஆதி குணசேகரன் அவர்கள் மூவரையும் போட்டுத்தள்ளுமாறு ரெளடி கும்பலுக்கு உத்தரவிடுகிறார்.
இதனால் ரெளடி கும்பல் அவர்கள் மூவரையும் அட்டாக் செய்ய சிங்கப்பெண்ணாய் எதிர்க்க தயாராகிறார் ஜனனி. அது ஒரு புறம் இருக்க, மண்டபத்தில் நந்தினி புர்கா அணிந்து சக்தியிடம் பேசுவதை கதிர் பார்த்துவிடுகிறார்.
இறுதியுத்தம்
தற்போது கதிர் என்ன செய்ய போகிறார். ஜனனி, அவர்களை அடிச்சு துவம்சம் செய்துவிட்டு ஜீவானந்தத்தையும், பார்கவியையும் பத்திரமாக அழைத்து செல்வாரா? இல்லை ஜனனி டீம் கொலை செய்ய படுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.