எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பெரிய ட்விஸ்ட்.. பிரியும் தர்ஷன் - பார்கவி?
எதிர்நீச்சல் தொடர்கிறது
டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் என ரசிகர்கள் பார்க்கும் அளவிற்கு பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
தற்போது தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் திருமணம் ஆனதற்கான பொய்யான ஆதாரத்தை காட்ட தர்ஷன், நந்தினி, ரேணுகா என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பிரியும் தர்ஷன் - பார்கவி?
இதையடுத்து தர்ஷன் மீது உரிமை கொண்டாடத் தொடங்கும் அன்புக்கரசி, சட்டப்படி எனக்கும் இவருக்கும் கல்யாணம் ஆயிருக்கு. அப்படித்தான பதிவாகி இருக்கு என சொல்லி, தர்ஷனை தன்னுடைய ரூமுக்கு அழைத்துச் செல்லப் பார்க்கிறார்.
அவரை தடுத்து நிறுத்து தர்ஷினி, அது பொய்யான பதிவு, ஒழுங்கு மரியாதையா போயிரு என மிரட்டுகிறார். பின்னர் பார்கவியை வீட்டைவிட்டு விரட்ட முடிவெடுத்த ஆதி குணசேகரன், போலீஸுக்கு போன் போட்டு வர வைக்கிறார்.
அப்போது குறுக்கே வரும் நந்தினி, தர்ஷன் பொண்டாட்டியா தான அவ இங்க இருக்கக் கூடாது, இவ என் சொந்தக்கார பெண் என சொன்னதும் ஜெர்க் ஆகிறார் குணசேகரன். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
