விஜய் டிவி நடிகருக்கு குழந்தை பிறந்தது.. வீடியோ மூலம் தெரிவித்த காமெடியன் KPY தீனா!

Trending Videos TV Program
By Bhavya Nov 17, 2025 12:30 PM GMT
Report

KPY தீனா

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் KPY தீனா. சின்னத்திரையில் ரைமிங், டைமிங் காமெடிகள் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர்.

தீனா தனுஷ் இயக்குநராக அறிமுகமான ப.பாண்டி படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகம் ஆனார். பின் கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர், கமல்ஹாசனின் விக்ரம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் தீனா, பிரகதீஸ்வரி என்ற கிராபிக் டிசைனரை திருமணம் செய்து கொண்டார்.

விஜய் டிவி நடிகருக்கு குழந்தை பிறந்தது.. வீடியோ மூலம் தெரிவித்த காமெடியன் KPY தீனா! | Kpy Dhina Became Father Video Goes Trending

அழகிய வீடியோ!  

கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த தீனாவிற்கு நவம்பர் 11ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.

மகளை கையில் வாங்கிய தருணத்தை வீடியோவாக அவர் தனது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார்.