யாருக்கும் உதவ, ஆறுதல் கூற நான் வரவில்லை!! நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஓபன் டாக்..
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். குறிப்பாக மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகருடன் இருந்த தொடர்பு குறித்த விசாரணை நடந்தது.

சுகேஷ் ஜாக்குலினுக்கு கொடுத்த பரிசு பொருட்கள், பணம் வழங்கியதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரம் முடிந்த சில மாதங்களில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய கருத்து தற்போது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
அதில், சமீபகாலமாக நான் எந்த விஷயத்திலும் கருத்து சொல்வதை நிறுத்திவிட்டேன், சில சமயங்களில் அமைதியாக இருப்பதும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இருந்தாலும் நான் செல்ல வேண்டிய பாதையில் தெளிவாக இருக்கிறேன், யாருக்கும் உதவவோ, ஆறுதல் கூறவோ நான் வரவில்லை, இது என் வாழ்க்கை, என் போக்கில் வாழும் வாழ்க்கை, எனக்காக மட்டுமே வாழ்கிறேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளர்.