பிக் பாஸ் 8 வெற்றியாளர் யார் தெரியுமா.. 50 லட்சம் இவருக்கு தானா
95 நாட்களை கடந்து பிக் பாஸ் 8 விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வாரம் பணப்பெட்டி வரும் என எதிர்பார்த்த நிலையில், வெளியேறிய எக்ஸ் போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்தனர்.
உள்ளே வந்தவுடன் பல விஷயங்களை கூறிய, வீட்டிற்குள் இருக்கும் 8 போட்டியாளர்களின் நம்பிக்கையை உடைக்க முயற்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த எக்ஸ் போட்டியாளர்கள் டைட்டில் வின்னர் குறித்து பேசினார்கள்.
இதில் வெளியே அதிக வாக்குகளை வைத்திருப்பது முத்துக்குமரன் தான், ஆகையால் டைட்டில் வின்னர் அவர் தான் என ரவீந்தர் கூற, முத்துக்குமரன் தான் டைட்டில் வெல்ல போகிறார் என்பதை வெளியேறிய பலரும் கூறியிருக்கிறோம் என சாச்சனா கூறுகிறார்.
இதன்மூலம் வீட்டிற்குள் வந்துள்ள எக்ஸ் போட்டியாளர்கள் அனைவருமே முத்துக்குமரன் தான் டைட்டில் வெல்ல போகிறார் என பேசியுள்ளனர். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.