ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ

Jiiva Thalaivar Thambi Thalaimaiyil
By Kathick Jan 25, 2026 03:30 PM GMT
Report

மலையாளத்தில் வெளிவந்த Falimy என்கிற படத்தை இயக்கியவர் இயக்குநர் நிதீஷ் சஹதேவ். இவர் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகி தமிழில் வெளிவந்துள்ள படம்தான் தலைவர் தம்பி தலைமையில் (TTT).

நடிகர் ஜீவா இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இளவரசு, தம்பி ராமையா, பிரார்த்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ | Thalaivar Thambi Thalaimaiyil Box Office Report

பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், 10 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம், உலகளவில் இதுவரை ரூ. 31+ கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.