நகை கடைக்கே தெரியாமல் நடந்த பெரிய மோசடி! எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க
பொதுவாக மக்களை ஏமாற்ற பல விதமான வழிகளை மோசடி காரர்கள் பின்பற்றி வருகிறார்கள். நாளுக்கு நாள் இதுபோன்ற மோசடி பற்றிய செய்திகளை பார்த்தால் மக்கள் எப்படி எல்லாம் முட்டாளாக்கப்படுகிறார்கள் என்பது புரியும்.
தற்போது ஒரு பிரபல நகைக்கடை பெயரில் நடந்த மோசடி பற்றி தகவல் வெளியாகி ஷாக் கொடுத்து இருக்கிறது. பிரபு, அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் அந்த நகைக்கடையில் விளம்பரத்தில் நடித்து வருகிறார்கள்.
அந்த நகை கடையில் வேலைவாய்ப்பு என இணையத்தில் போலியாக அறிவிப்பினை வெளியிட்டு சிலர் மோசடி செய்து இருக்கின்றனர். அப்ளிகேஷனுக்கு மட்டும் 3500 ருபாய் வசூலித்து இருக்கின்றனர்.
அதன் பின் சில வாரங்களில் வேலை தருகிறோம் அதற்கு டெபாசிட் ஆக 84000 ருபாய் செலுத்த வேண்டும் என சொல்லி பலரிடம் மோசடி செய்து இருக்கின்றனர். இது பற்றி அந்த நகை கடைக்கு தெரிய வர தற்போது மர்ம நபர்கள் பற்றி போலீசிடம் புகார் அளித்து இருக்கின்றனர்.