கர்ப்பிணி மனைவியை கைவிட்ட அப்பா, அவமானம் கடந்து வென்ற ஜெமினி கணேசனின் மகள்..
ஜெமினி கணேசனின் மகள்
ஜெமினி கணேசஷின் மகளாக இந்திய சினிமாவில் டாப் நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரேகா. 4 வயதில் நடிக்க ஆரம்பித்த நடிகை ரேகா, சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தார். ரேகாவின் குடும்ப வாழ்க்கை சர்ச்சைக்குரியதாகவே இருந்துள்ளது. ரேகா எப்போது தனியாகவே காணப்பட்டார். ரேகாவின் தந்தை ஜெமினி கணேசன், ரியல் வாழ்க்கையிலும் காதல் மன்னனாக திகழ்ந்து வந்தார்.
புஷ்பவல்லி
ஜெமினி கணேசன் 1940ல் 19 வயதில் அலமேலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அலமேலுவுக்குப் பின் நடிகை புஷ்பவல்லியுடன் ரகசிய உறவில் இருந்தார். இவர்களுக்கு பிறந்தவர் தான் ரேகா. ஆனால் ஜெமினி கணேசனுக்கும், புஷ்பவல்லிக்கும் திருமணமாகும் முன்பே ரேகா பிறந்துவிட்டார். அதன்பின் ரேகாவை தன் மகளாக ஜெமினி கணேசன் ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் ஜெமினி கணேசன் புஷ்பவல்லியை திருமணம் செய்யவில்லை. ரேகாவுக்கும் தன் தந்தை என்றால் பிடிக்காது. 2005ல் ஜெமினி கணேசன் இறந்த போது கூட இறுதிச்சடங்கிற்கு ரேகா பங்கேற்கவில்லை.
கர்ப்பிணி மனைவி
15-வது வயதில் 'ஆபரேஷன் நல்லி' என்ற திரைப்படத்தில் ரேகா கதாநாயகியாக அறிமுகமானார். புகழ்பெற்ற நடிகராக ஜெமினி கணேசன் இருந்த போதும், ரேகாவையும் அவரது குடும்பத்தையும் ஜெமினி கணேசன் ஏற்றுக்கொள்ளாததால், பட வாய்ப்பு இல்லாமல் ரேகா பலவிதமான கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்தித்துள்ளார்.
தந்தையின் நிராகரிப்பு, சினிமாவில் பட்ட அவமானங்களால் உடைந்து போன ரேகா, ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அந்த நேரத்தில் தாய் புஷ்பவல்லி அவரை காப்பாற்றியுள்ளார். தொடர்ந்து, 'தோஷிகாரி' படத்தில் ரேகா கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கிய முதல் சம்பளம் வெறும் 25 ஆயிரம் ரூபாய் தான். அப்படி பல கஷ்டங்களுக்கு பின் பாலிவுட் சினிமா வட்டாரத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து இன்றும் அவரது இடத்தில் பெரிய அந்தஸ்துடன் வாழ்ந்து வருகிறார் நடிகை ரேகா.