ஜாய் கிரிசில்டா என்னை ஏமாற்றிவிட்டார்..கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன்!! மாதம்பட்டி ரங்கராஜ்..
ஜாய் கிரிசில்டா - மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரின் இரண்டாம் மனைவி ஜாய் கிரிஸில்டா பற்றிய விவகாரம் தான் டாப் ஹைலெட் நியூஸாக சமீபகாலமாக இருந்து வருகிறது.
தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான புகார்களை அளித்ததோடு, அவருடன் நெருக்கமாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை ஜாய் இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
என்னை ஏமாற்றிவிட்டார்
இதுகுறித்து பலர் விமர்சித்து பேசியநிலையில், ஜாய் கிரிசில்டாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். ஜாய் கிரிசில்டா என்னை ஏமாற்றிவிட்டார். நான் வைத்திருந்த நம்பிக்கையை ஜாய் கிரிசில்டா தவறாக பயன்படுத்தினார்.
ஜாய் கிரிடில்டாவின் பேட்டியால் எனது குழந்தைகள் பாதிப்பு என்று உயர்நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் வாதிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, அவரது வாதத்தை கேட்ட நீதிபதி, மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த கருத்துக்களை தெரிவிக்க ஜாய் கிரிஸில்டாவுக்கு தடைவிதிக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.