மீண்டும் தூண்டில் போட மாஸ் நடிகரின் வீட்டருகில் பங்களா!! விவாகரத்து வதந்தியை வைத்து பிளான் போடும் பிரபல நடிகை
மிஸ் மெட்ராஸ் பட்டத்தை வென்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு பிரபலமானவர் தான் அந்த மூன்றெழுத்து நடிகை. ஒட்டுமொத்த 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வளம் வந்த நடிகை குடிபோதை மற்றும் இரவு பார்ட்டி என்று ஆரம்பக்கட்ட சினிமா வாழ்க்கையில் ஜாலியாக இருந்து வந்தார்.
அப்போது நிச்சயம் வரை சென்று கல்யாணத்தை நிறுத்திவிட்டு அக்கடதேசத்து நடிகருடன் காதலில் சிக்கினார். நடிகர் எங்கு சென்றாலும் சென்னை வந்ததும் அவர் வீட்டுக்கு தான் போவேன் என்று கூட மேடையில் உளறினார்.
அப்படி இருக்கும் நிலையில் மூன்றெழுத்து நடிகையின் மார்க்கெட் பரிபோன சில வருடத்தில் நம்பர் எண் கொண்ட படத்தில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தினார்.
மூன்றெழுத்து நடிகை தற்போது மாஸ் நடிகராக இருக்கும் நடிகருடன் ஆரம்பகாலத்தில் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார். மாஸ் நடிகரின் மனைவி போட்ட கண்டீசன் தான் அந்த நடிகரை மீண்டும் நெருக்கமுடியாமல் தவித்தார்.
இந்நிலையில் அந்த நடிகர் இருக்கும் பங்களாவிற்கு அருகிலேயே மூன்றெழுத்து நடிகையும் ஒரு பிளாட் வாங்கி பங்களாவில் குடியேறியிருக்கிறாராம். இதனால் மீண்டும் தன்னுடைய பழக்கத்தை ஆரம்பிக்கவுள்ளாரா என்று கிசுகிசுக்கப்பட்டும் வருகிறது.