ஆசைக்கு அடிபணியாதவர்களை வைரமுத்து இதைதான் செய்வார்!! பாடகி கூறிய பகீர் தகவல்...
சினிமாத்துறை மட்டும் இல்லாமல் பல துறைகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நடந்து வருவது சகஜமாகிவிட்டது. அது சினிமாத்துறை பெரியளவில் பார்க்கபடுவதால் அந்த குற்றச்சாட்டுக்கு பல இடங்களில் பிரபலமாகிவிடும்.
அப்படி தமிழ் சினிமாவின் பாடலாசிரியராக திகழ்ந்து வரும் வைரமுத்து மீது சில ஆண்டுகளுக்கு முன் பிரபல பின்னணி பாடகி சின்மயி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று கூறி வைரமுத்து மீது புகாரளித்தது பெரியளவில் பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து பல பெண்கள் அவர் மீது புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் பிரபல பாடகியான புவனா சேஷன் என்பவரும் வைரமுத்து மீது புகாரளித்திருந்தார். தற்போது அவர் பகிர்ந்துள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, வைரமுத்து ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கும் போதே அவரின் ஆசைக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்ற கண்டீசன் போடுவார் என்றும் அதை செய்யவில்லை என்றாலோ வாய்ப்பே வேண்டாம் என்று கூறி வெளியேறிவிட்டாலோ, அதன்பின்பு சினிமாவில் எங்கேயும் பாடமுடியாத அளவிற்கு அவர்களை பழிவாங்கி விடுவார் என்று புவனா சேஷன் கூறியிருக்கிறார்.