நயன்தாராவை கேட்டன்னு சொல்லுங்க!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை காரில் ஓடவிட்ட ரசிகர்..
தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வாங்கி வெளியிட்டு வருகிறது. அதற்கு காரணம் தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின் கையில் தான் இருக்கிறது.
குருவி படத்தில் ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகர்களின் படம் வரை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் விநியோகம் செய்து வருகிறது. அரசியலிலும் விநியோகத்திலும் ஈடுபட்டு வரும் உதயநிதி ஸ்டாலின், இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அரசியல் சம்பந்தமாக பிரச்சாரத்தில் பல இடங்களுக்கு சென்று வரும் உதயநிதி ஸ்டாலின் காரை ஒரு நபர் பைக்கில் ஃபாலோ செய்துள்ளார். உதயநிதி காரிடம் சென்ற அந்த நபர் நயன் தாராவை கேட்டன்னு சொல்லுங்க அமைச்சர் என்று கிண்டலடிக்கும் படி கத்தி கூறியுள்ளார்.
ஆனால் கார் கண்ணாடி மூடியதால் அந்த நபர் பேசியது உதயநிதிக்கு கேட்காமல் போனது. ஆனால் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாராவுடன் உதயநிதி ஸ்டாலின் ஒருசில படங்களில் ஜோடியாக நடித்த போது இருவருக்கும் இடையில் காதல் கிசுகிசுக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
யாரோ நம்ம பையன் தான் பண்ணியிருக்கான் ??? pic.twitter.com/Ger6hMppPS
— Prasath (@imprasath) February 20, 2023